2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பான இடத்தில் கண்டாவளை பிரதேச செயலகம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 01 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்துக்கான நிரந்தரக் கட்டடம் பாதுகாப்பான இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தார்.

இப்பிரதேச செயலகத்துக்கான நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்காக நிதி பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலிருந்து 2010ஆம் ஆண்டு கிடைத்தது. எனினும், பிரதேச செயலகம் அமைப்பதற்கு பாதுகாப்பான  இடம் இல்லாமையால் குறித்த நிதி திரும்பிச் சென்றது.

இந்நிலையில், பிரதேச செயலகம் அமைப்பதற்கு பாதுகாப்பான இடம் தெரிவு செய்யப்பட்டு, அமைச்சிலிருந்து நிதி பெறப்பட்டு  நிரந்தரக் கட்டடம் அமைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

கண்டாவளை பிரதேச செயலகம் தற்போது தாழ்;வான இடத்தில் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் பிரதேச செயலகம் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றது. 2013ஆம் ஆண்டு பெய்த மழையின்போது பிரதேச செயலகத்தின் சொத்துக்கள் பல அழிவடைந்திருந்தன.

மேலும், இப்பிரதேச செயலகத்தின் சில அலுவலகப் பிரிவுகள் தற்போது பாரவூர்திப் பெட்டிக்குள்  இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X