2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 01 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.அரசரட்ணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் வேலைவாய்ப்பற்றுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அப்பிரதேச செயலகம் இன்று செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தது.

தச்சுத்தொழில், மேசன் போன்ற தொழிற்பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்படுவதுடன், தன்னார்வ தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதேச செயலகம் கூறியது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு மறுவாழ்வு கொடுத்து, வாழ்க்கைத்தரத்தை  உயர்த்தும் நோக்கில் இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இத்தொழிற்பயிற்சிகளில் இணைய விரும்புகின்றவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமைக்கு (03) முன்பாக பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தரைச் சந்தித்து,  பதிவை  மேற்கொள்ளுமாறு பிரதேச செயலகம்  கேட்டுக்கொண்டுள்ளது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X