2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் சர்வதேச மைதானம், மாவட்ட செயலக நிர்மாணப் பணிகள் பூர்த்தி

Menaka Mookandi   / 2014 ஜூலை 02 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன், சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையுமென எதிர்பார்ப்பதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் இன்று புதன்கிழமை (02) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகக் கட்டிடம் 165 மில்லியன் ரூபா செலவிலும், சர்வதேச விளையாட்டு மைதானம் 320 மில்லியன் ரூபா செலவிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டச் செயலகத்தின் கட்டிடப் பணிகள் 2012ஆம் ஆண்டும், சர்வதேச விளையாட்டு மைதானத்தின் கட்டிடப் பணிகள் 2011ஆம் ஆண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

மேற்படி கட்டிடப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் முடிவுறும் எனவும் அதனைத் தொடர்ந்து அவற்றினைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X