2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 07 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பிரதேச  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் வன்னி  அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ரிசாட்; பதியுதீன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (7) காலை நடைபெற்றது.

இந்த நிலையில், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்;பட்ட கிராமங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகளான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி தொடர்பில் ஆரயப்பட்டன.

அத்துடன்,  மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதேவேளை, மன்னார் நகரசபை மற்றும் மன்னார் பிரதேச சபைகளுக்கு உட்;பட்ட பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில்  கலந்துகொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்டத்தில் உள்ள வீதி மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைத்தனர்.  இந்;தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தருமாறும்  அவர்கள் கோரினர்.

மேலும்,  மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பிலும்  ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், ஹுனைஸ் பாரூக், முத்தலிப் பாரூக், வடமாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X