2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வளங்களைச் சரியாகப் பயன்படுத்தி இலக்குகளை அடையமுடியும்

Kogilavani   / 2014 ஜூலை 09 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


“எங்களுக்கு கிடைக்கின்ற வளங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்போது, நாங்கள் எதிர்பார்க்கின்ற இலக்கினை அடையமுடியும்” என கிளிநொச்சி மாவட்;ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டம் மருதநகர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறுதானியங்களின் அறுவடை விழா இன்று புதன்கிழமை (09) இடம்பெற்றது.
மேற்படி பகுதியில் 10 விவசாயிகளினால் 2 ½ ஏக்கர் நிலப்பரப்பில், மேற்கொள்ளப்பட்;ட சிறுதானியங்கள் இதன்போது அறுவடை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே செல்வராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்செய்கை பிரதானமனது. நெற்செய்கைக் காலங்கள் தவிர்ந்த ஏனைய காலங்களில் பயிர்ச் செய்கை நிலங்கள் தரிசு நிலங்களாகவே விடப்படுகின்றன.

இவ்வாறான சிறுதானிய பயிர் செய்கையின் மூலம் விவசாயிகள் பெரும் நன்மையடையும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இதுபோன்ற பயிர்ச் செய்கைகளை எல்லா இடங்களிலும் மேற்கொள்ள முடியாது. அதற்கென தெரிவு செய்யப்பட்ட நிலப்பரப்புக்களில், உரிய முறையில் விவசாயிகளின் முயற்சியால் இச்செய்கை வெற்றியளித்துள்ளது.

எங்களுக்கு கிடைக்கின்ற வளங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன்மூலம் எதிர்பார்த்த வெற்றியினை அடைய முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன், விவசாய திணைக்கங்களின் அதிகார்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X