2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வன்னி பார்வையற்றோர் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா

Kanagaraj   / 2014 ஜூலை 09 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள வன்னி பார்வையற்றோர் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கரைச்சி வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை (10) கொண்டாடப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ச.ரூபராசா இன்று புதன்கிழமை (09) தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கண்டாவளை பிரதேச செயலர் த.முகுந்தன்;, சிறப்பு விருந்தினராக குடும்ப புனர்வாழ்வு இணைப்பாளர் வி.பிறேம்குமார், பண்டிதர் பரந்தாமன் கலைக்கல்லூரிப் பணிப்பாளர் க.சவுந்;தர்ராஜா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

வன்னிப்பகுதியில் பிறப்பினாலும், யுத்தத்தினாலும், விபத்துக்களாலும் கண் பார்வைகளை இழந்தவர்களின் நலன்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்;;ட வன்னி பார்வையற்றோர் சங்கம், அங்கத்தவர்களுக்கு பல சேவைகளைச் செய்து வருவதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X