2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

திரிசூலத்தில் முகம் தெரியும் அதிசயம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 10 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மாடசாமி கோவிலில் உள்ள திரிசூலமொன்றில் பெண் முகம் தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

புதன்கிழமை (9) மாலை கோவிலில் உள்ள திரிசூலத்தை சிலர் அவதானித்த போது திரிசூலத்தின் நடுப்பகுதியில் உள்ள அகலமான பகுதியில் கண், மூக்கு, வாய் பகுதி உள்ளடங்கலாக பெண் உருவம் உள்ளதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து தகவல் பரவவே பொது மக்கள் அவ்வாலயம் உள்ளபகுதிக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இவ்வுருவம் அம்மனின் திருமுகம் என ஒரு சிலரும், மாடசாமியின் திருவுருவம் என இன்னொரு பிரிவினரும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X