2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பேரூந்தை மறித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், உயிலங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் வியாழக்கிழமை(10) காலை தனியார் பேரூந்து ஒன்றை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் சிறிதுநேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

மேற்படி தனியார் பஸ் வண்டியானது, பாடசாலை மாணவர்களை கடந்த சில தினங்களாக ஏற்றாமல் செல்வதினை கண்டித்தே இவ்வீதி மறியல் மேற்கொள்ளப்பட்டதாக பாடசாலை மாணவர்கள் தெரிவித்தனர்.

மன்னாரில் இருந்து காலை 7.20 மணிக்கு மடு நோக்கி புறப்படும் மேற்படி தனியார் பேரூந்து உயிலங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு செல்வதற்காக சிறுநாவற்குளம், கள்ளிக்கட்டைக்காடு, நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களில் காத்திருந்த மாணவர்களை ஏற்றாது சில தினங்களாக சென்றுள்ளது.

இதனால் நுற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் வியாழககிழமையும் காலை 7.20 மணியளவில் மன்னாரில் இருந்து மடுவிற்கு தனியார் பஸ் புறப்பட்டபோதும் மாணவர்களை ஏற்றாது சென்றுள்ளது.

இந்நிலையில் உயிலங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் பேரூந்தை உயிலங்குளம் சந்தியில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கதைத்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் சுமார் ஒரு மணித்தியாலம் தாமதத்தின் பின்பே பேரூந்து மடுவை நோக்கிச் சென்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X