2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பொது நூலகம் நிர்மாணிக்கப்படுகின்றது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 10 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கச்சி பொதுநூலகம் 4.2 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச சபையின் தவிசாளர் நா.வை.குகராசா இன்று வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கீழ், முரசுமோட்டை பொதுநூலகம், ஸ்கந்தபுரம் பொதுநூலகம், கிளிநொச்சி நகர பொதுநூலகம், வட்டக்கச்சி பொதுநூலகம் ஆகிய நான்கு நூலகங்கள் இயங்கி வருகின்றன.

இவற்றில் வட்டக்கச்சி பொதுநூலகம் நிரந்தரக் கட்டிடம் இன்றி தனியார் கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகின்றது.

இந்நிலையில், கரைச்சிப் பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டத்தின் 4.2 மில்;லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நூலகத்திற்கான நிரந்தரக் கட்டிடம் அமைக்கும் பணிகள் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X