2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா வடக்கு ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 11 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நேற்று வியாழக்கிழமை முதலுதவிப் பயிற்சி வழங்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சியில் வவுனியா வடக்கில் பணியாற்றும் கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அனர்த்தங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு எவ்வாறான முதலுதவிகளை வழங்குவது என்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன்,  செயன்முறையும் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவின் முதலுதவி வளவாளர் கே.ராஜ்சங்கரினால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் அனர்த்த முகமைத்துவ நிலையத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X