2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மற்றுமொரு மானியத்திட்டம்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் பதிவு செய்து எரிபொருள் மானியம் பெற்ற அனைத்து மீன் பிடி படகு உரிமையாளர்களுக்கும் மற்றுமொரு மானியத்திட்டமாக, வலைத்தொகுதி மற்றும் தற்பாதுகாப்பு அங்கிகள் என்பன வெள்ளிக்கிழமை (11)   வழங்கி வைக்கப்பட்டதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 2500 மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டதோடு, ஒரு உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து பன்னிரெண்டு ஆயிரம் ரூபாய்  பெறுமதியான வலைத்தொகுதிகள் மற்றும் 2 தற்பாதுகாப்பு அங்கிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

மேலும்  முதற்கடடத்தின் போது மீனவர்களுக்கு வழங்குவதற்காக 5325 தற்பாதுகாப்பு அங்கிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கடற்தொழில் அமைச்சினால் மீனவர்கள் தற்பாதுகாப்பு அங்கி அணிந்தே தொழிலுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததற்கு அமைவாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X