2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சிப்பட்டறை

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


இலங்கை போக்குவரத்துப் பொலிஸாரின் தலைமைக் காரியாலயத்தின் ஏற்பாட்டின் கீழ்,  வீதி போக்குவரத்து விதிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) வவுனியா நகரில் இடம்பெற்றது.

இதன் போது வவுனியாவின் ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறையும் வீதி ஒழுங்கு முறை பற்றிய விளக்கமளிப்பும் இடம்பெற்றது.

முதலாவதாக வீதிக்குறியீடுகள், சமிக்ஞைகள், போக்குவரத்து விதிகள் தொடர்பாக வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் விளக்கமளிப்பு செயலமர்வும், அதனைத் தொடர்ந்து வவுனியா நகர கண்டி வீதியில் விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய காட்சிகளும் காண்பிக்கப்பட்டது.

இதில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, வவுனியா, மன்னார் உதவிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் யூ.கே.திஸாநாயக்கா, வவுனியா பொலிஸ்நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி, உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X