2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கொட்டகைகளில் வாழ்பவர்களுக்கு தற்காலிக வீடுகள் : பிரதேச செயலாளர்

Super User   / 2014 ஜூலை 12 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்
அனர்த்தங்களில் இருந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கோடு கொட்டகைகளில் வாழ்பவர்களுக்கு தற்காலிக வீடுகளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நிதியுதவியின் கீழ் அமைத்து கொடுக்கவுள்ளதாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தெரிவித்தார்.

இவ்வீடுகள் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்படவுள்ளதோடு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மூலம் வவுனியா வடக்கு பிரதேச செலயகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  89 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X