2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நீர்பாசன திட்டம் அமைக்க நடவடிக்கை

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திலுள்ள நட்டான்கண்டல் பனங்காமம் பிரதேசத்தில் பாரிய நீர்பாசனத் திட்டமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் மகாலிங்கம் தயானந்தன் தமிழ் மிரருக்கு வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.

இந்த பாரிய நீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் சுமார் 1800 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீரைப்பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைப்பதுடன், இதனால் 500 இற்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாந்தை கிழக்குப் பிரதேசத்திலுள்ள புளியங்குளம், பனங்காமம்குளம், சாலமன்குளம், நட்டான்குளம் ஆகிய நான்கு குளங்களில் இருந்தும் நீரைப் பெற்றுக்கொள்ள வடிகாலமைப்பு வசதி மேற்கொள்ளப்படவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ரிசாத் பதியுதீன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவருமான சட்டத்தரணி ஹ_னைஸ் பாருக் ஆகியோரின் முயற்சியால் இந்த பாரிய நீர்ப்பாசனம் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக நீர்பாசம் மற்றும் நிர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு சுமார் நான்கு கோடி ரூபாவை ஓதுக்கீடு செய்யவுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X