2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா நகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா நகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்கள்  காலவரையரையற்ற பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை மீண்டும்  நகரசபை முன்றலில்  இன்று திங்கட்கிழமையிலிருந்து (14)  முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 02ஆம் திகதி வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பணிப்பகிஷ்கரிப்பில்  ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது,  கடந்த 11ஆம் திகதிக்குள் 03 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்து நியமனங்கள் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்திருந்தார்.

எனினும், இதுவரை அக்குழு நியமிக்கப்படவில்லை.   தமது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி  இவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில், வவுனியா நகரசபையில் பணியாற்றும் அனைத்து சுகாதாரத்  தொழிலாளர்களும் நியமனம் கிடைக்காத சாரதிகளும் பங்குபற்றியுள்ளனர்.

வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதாரத் தொழிலாளர்களில் 07 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும், வடமாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமனற்ஙகளில் ஆளணி அதிகரிக்கப்பட வேண்டும், வவுனியா நகரசபையால் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட காவல் கடமை பதவிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், உள்ளக வெற்றிடங்கள் உள்ளகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும், 30 வருடங்களாக பணியாற்றுபவர்களுக்கு இதுவரையில் தரம் உயர்வு வழங்கப்படாமையால் அரச சுற்றுநிரூபம் 01- 2001 இற்கு அமைய தரம் உயர்வு வழங்கப்பட வேண்டும், வேறு திணைக்களங்களில் பணியாற்றும்  தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள்; வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு சாப்பாட்டறை கட்டிக் கொடுக்கப்படவேண்டும். தொழிலாளர்களுக்கான மலசலகூடம் புனரமைப்பு செய்து தரப்பட வேண்டும். அந்தந்த இடங்களில் பணிபுரிபவர்கள் அங்கேயே பணி புரிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். சுகாதார பகுதி நலன்புரிச்சங்கத்துக்கு நகரசபையால் சலுகைகள் வழங்கப்பட வேண்டு;ம், உமா எனப்படும் சுகாதார தொழிலாளியை தொழிலாளிகளுடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டும், வடமாகாண உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்பட வேண்டும் என்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30ஆம் திகதி வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X