2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நட்பு நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கட்டிடத் தொகுதியில் அமையப்பெற்ற நட்பு நிலையம் இன்று திங்கட்கிழமை (14) காலை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நட்பு நிலையத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகளை, உளநல ஆற்றுப்படுத்தல் மூலம் குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் சிறுவர்கள், பெண்களிற்கு ஏற்படும் மன உளைச்சல், பிணக்குகளால் ஏற்படும் காயங்கள், தற்கொலை முயற்சிகள், விவாகரத்து போன்றவற்றினை 'குடும்ப சிக்கல்களிற்கான உளநல சுகாதாரத்தின் மூலம்' குறைப்பதற்கான நிகழ்ச்சி திட்டங்கள் இந்த நிலையத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளன.

குடும்பங்களில் ஏற்படும் வன்முறைகள் தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலையின் நட்பு நிலையத்தில் முறையிட்டு மக்கள் தங்கள் பிரச்சினைகளிற்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலை நிர்வாகம் மேலும் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X