2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஊட்டச்சத்து தொடர்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும், பிரதேச சுகாதார பணிப்பாளர் பணிமனையும் இணைந்து 'இரும்புச்சத்துள்ள உணவை உண்போம், நலம், பலம், புத்திகூர்மையினைப் பெறுவோம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலத்தினையும் கண்காட்;சியினையும் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (14) நடத்தின.

கிளிநொச்சி நகரில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் திருநகர் தாய் சேய் நிலையம் வரை சென்றடைந்தது.  தொடர்;ந்து திருநகர் தாய் சேய் நிலையத்தில் கண்காட்சியும் இடம்பெற்றது.

இயற்கையான சூழலில் காணப்படும் உணவுகளை பயன்படுத்தி, சத்துணவை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும், குறித்த உணவுகளை எவ்வாறு தாயாரிப்பது மற்றும், சிறுவயதிலேயே குழந்தைகளிற்கு சத்துள்ள உணவுப் பழக்கத்தினை ஏற்படுத்தல் என்பன தொடர்பில் இந்த ஊர்வலம் மற்றும் கண்காட்சி என்பன அமைந்திருந்தன.

இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X