2025 ஜூலை 19, சனிக்கிழமை

பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்

Super User   / 2014 ஜூலை 15 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பன்றிக்கெய்தகுளம் சந்தியில் இடம்பெற்ற விபத்துச்சம்பவமொன்றில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்து வேகக்கட்டுபாட்டை இழந்து, அவ்வழியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் மீது மோதியதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றும் ஒருவரை மோதியுள்ளது.

இச்சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த திருநாவற்குளத்தை சேர்ந்த 65 வயதான சுப்பையா அரசரட்ணம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் துவிச்சக்கரவண்டியில்  சென்றவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேருந்தின் சாரதியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பேருந்தினையும் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X