2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காணி விடயங்கள் தொடர்பில் பயிற்சி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 17 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தில் காணி விடயங்களை கையாள்வது தொடர்பில் கற்றுக்கன்க்ண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் விசேட பயிற்சி வகுப்பு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில், காணி மற்றும் காணி மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

இப்பயிற்சியின்போது, அரசாங்க காணிகளை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு சட்டத்துக்கு உட்பட்டு எவ்வாறான நடைமுறைகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இதில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள் உட்பட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X