2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் தவிசாளர் படுகாயம்

Super User   / 2014 ஜூலை 17 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கரைச்சி பிரதேச சபை வாகனம் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து இன்று (17) மாலை குடைசாய்ந்ததில், அதில் பயணித்த தவிசாளர் நா.வை. குகராசா படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்;ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த விபத்தில் சிறு காயங்களுக்குள்ளாகிய பிரதேச சபையின் 7 பணியாளர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஊழியர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று திரும்பும் வழியிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளாகிய வாகனத்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X