2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நெற்காணிகளை மேட்டுக்காணிகளாக மாற்றினால் நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நெற்காணிகளை மண் இட்டு நிரப்பி மேட்டுக் காணிகளாக மாற்றுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.தயாரூபன் இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏராளமான வயல் நிலங்கள் தினமும் சட்ட விரோதமான முறையில் மண் போட்டு நிரப்பி மேட்டுக்காணிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

இதனால் நெற்செய்கை காணிகளின் அளவு குறைவடைந்து வருவதுடன் நெல் உற்பத்தியும் பாதிக்கும் அபாய நிலை காணப்படுகின்றது.

ஆகவே, இந்த விடயம் தொடர்பாக கடுமையாக நடவடிக்கைகளை எதிர்காலங்களில் மேற்கொள்ளவுள்ளோம்.

அந்த வகையில், இவ்வாறு மேட்டுக் காணிகளாக மாற்றுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இனிவருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X