2025 ஜூலை 21, திங்கட்கிழமை

காலபோக செய்கைக்கு விதை நெல் தேவைப்படுகின்றது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 20 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் காலபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு வெளிமாவட்டங்களிலிருந்து 40 ஆயிரம் ஏக்கருக்குரிய விதை நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை காணப்படுவதாக  மாவட்ட கமநல சேவைகள் ஆணையாளர் ஈ.தயாளரூபன் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.

நவம்பர் மாதம்  காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு பெப்ரவரி மாதம் அறுவடை செய்யப்படுகின்றது.

இந்த  மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை  50 ஆயிரம் ஏக்கர் தொடக்கம் 60 ஆயிரம் ஏக்கர் வரை மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த வருட இறுதியில் போதியளவான  மழை கிடைக்காமையால், கடந்த வருட காலபோக நெற்செய்கையில் 2ஃ3 பங்கு நெற்செய்கை  அழிவடைந்தது.  இதனால், இந்த வருட காலபோகத்திற்குரிய விதை நெல்லைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். 

மேலும், இரணைமடுவிலுள்ள நீரைக்; கொண்டு சிறுபோக நெற்செய்கை  450 ஏக்கரில்  செய்யப்பட்டது. இதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட விதை நெல்லைக் கொண்டு  எதிர்வரும் காலபோகத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்குரிய நெற்செய்கையை மேற்கொள்ளப்படும் முடியும் எனவும் அவர் கூறினார்.

ஆகவே, எஞ்சிய 40 ஆயிரம் ஏக்கர் விதை நெல்லை வெளிமாவட்டங்களிலிருந்து கொள்வனவு செய்ய வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

சிறுபோக நெற்செய்கை ஏப்ரல் மாதம்   மேற்கொள்ளப்பட்டு  ஜுலை மாதம்  அறுவடை செய்யப்படுகின்றது.

இருப்பினும், வெளிமாவட்டங்களிலும் வறட்சியான காலநிலை நிலவிய காரணத்தினால் அங்கும் விதை நெல்லுக்கு தட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X