2025 ஜூலை 19, சனிக்கிழமை

மன்னிப்பு கேட்கின்றேன்: செல்வம் எம்.பி.

Suganthini Ratnam   / 2014 ஜூலை 28 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

ஊடகவியலாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா மாணிக்கம் ஜெகனின் 'கூவாதே கூடுகட்டு' கவிதை தொகுப்பு நூல் வெளியிட்டு விழாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்  இவ்வாறு மன்னிப்புக் கேட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஊடகவியலாளர்களுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஓமந்தை சோதனைச்சாவடியில் இடம்பெற்ற சம்பவத்தின்போது ஊடகவியலாளகள் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்.

எனினும், தொலைபேசியில் என்னால் தொடர்புகொள்ளமுடியாது போயுள்ளது.  அவர்களுக்கு ஆபத்து என்கின்றபோது நான் அந்த இடத்தில் நின்றிருக்க வேண்டியவனாக இருந்தும், அவ்விடத்திற்கு செல்லாமை தொடர்பில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.

அண்மைக்காலமாக உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் இயல்பாக நடந்து வருகின்றது. இது மாத்திரமின்றி தமிழ் ஊடகவியலாளர்களின் வளர்ச்சியை மழுங்கடித்து விடவும் அரசுடன் சார்ந்த பல தரப்பாலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X