2025 ஜூலை 21, திங்கட்கிழமை

காணாமல்போனவர்களின் உறவினர்கள் அமைதிப் போராட்டம்

Administrator   / 2015 ஜனவரி 26 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்


அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் காணாமல்போன, கடத்தப்பட்டவர்களை கண்டறியக்கோரியும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி தொடர்பான விசாரணையை முன்னெடுக்கக் கோரியும் மன்னாரில் மாபெரும் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.


மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (26) காலை 10.15 மணியளவில் இந்த அமைதி ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலக வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.


இந்த ஊர்வலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் முகத்தில் கறுப்புத் துணி கட்டி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோனி சகாயம், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், காணாமற்போனவர்களின் உறவினர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X