2025 ஜூலை 21, திங்கட்கிழமை

முல்லைத்தீவின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மாசடைவதை பாதுகாப்பதற்கான பல்வேறு செயற்றிட்;டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரிவு தெரிவித்தது.

உள்ளுராட்சி மன்றங்களால் செயற்படுத்தப்பட்டு வரும் சடலங்களை தகனம் செய்யும்; மற்றும் திண்மக்கழிவு, திரவக்கழிவுகள் அகற்றும் செயல்முறைகள் ஆகியன உரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளது.

மேற்படி செயற்படுகள் பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கப்படாமையால், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

இவற்றை பாதுகாக்கும்; வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச சபைகளின் கீழ் உள்ள மயானங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சிறந்த தொழில்நுட்ப வழிகளைக் கொண்டு அமைக்கப்;பட்டு, மின்சாரத்தின் மூலம் தகனம் செய்யும் மயானங்களை அமைப்பதற்கு சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும்.

சேகரிக்கப்படும் திண்ம மற்றும் திரவக்கழிவு அகற்றும் நடவடிக்கைகள் உரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகளுக்கு அமைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சகல உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச சபைகளினூடாக இத்திட்டம் முன்னெடுக்கும் போது, எதிர்காலத்;தில் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க முடியும் எனவும் இதற்கான நடவடிக்கை இந்த ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X