2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

27 இந்திய மீன்பிடிப் படகுகள் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்திய மீனவர்களின் 27 படகுகள் தற்போது தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் மீன்பிடி படகுகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 143 இந்திய மீனவர்கள், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்து மீட்கப்பட்ட வலைத்தொகுதிகள் உட்பட சில பொருட்கள், நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X