2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

30 சதவீத மக்கள் வாக்காளர் பதிவில் அக்கறையில்லை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 02 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன் 

இலங்கையில் 30 சதவீதமான மக்கள் வாக்காளர் பதிவு தொடர்பில் அக்கறையின்றி இருப்பதாக  பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (02) நடைபெற்ற வாக்காளர் தின நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றுகையில்,

'மேற்படி மக்கள்; வாக்காளர் பதிவு தொடர்பில் அக்கறையின்றி இருப்பார்கள்.  தேர்தல் காலத்தில்  நாங்கள் வாக்காளர்களாக பதிய மறந்துவிட்டோம். எங்களையும் வாக்களிப்பதற்கு அனுமதியுங்கள் என்று கடிதங்கள் மற்றும் தொலைபேசிகள் மூலம் எங்களிடம் தொடர்புகொள்வார்கள்.

இதனைத் தவிர்த்து வாக்காளர் இடாப்பின் பதிவுகள் மேற்கொள்ளும்போது, தங்களையும் வாக்காளர்களாக இணைத்துக்கொள்ள வேண்டும்.
வாக்களிப்பது உரிமை. நீங்கள் வாக்களிப்பதன் மூலம் சட்டங்களை இயற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதுடன், நாட்டின் ஜனாதிபதியையும்  தெரிவுசெய்ய முடியும்.

மேலும், தொழில் வாய்ப்புக்களை  நீங்கள் நாடும்போது உங்கள் வாக்காளர் அட்டையை  சில இடங்களில் கேட்கின்றார்கள்.

வடமாகாணத்தில் கிளிநொச்சி,  யாழ்ப்பாணம் ஆகிய  மாவட்டங்களுக்கு தலா 6 நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவுசெய்யப்படுவார்கள். 5 பேர் வாக்களிப்பு மூலமும் ஒருவர் மாகாண ஒதுக்கீட்டின் மூலமும் தெரிவு செய்யப்படுவார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தமைக்கான காரணம் வாக்காளர்களின் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் குறைவடைந்தமையே ஆகும்' என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X