2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

9 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாதிருந்த ஒன்பது பேருக்கு இன்று சனிக்கிழமை (05) காணி அனுமதிப்பத்திரங்கள் வவுனியா பிரதேச அபிவிருததி குழு கூட்டத்தின் போது வழங்கி வைக்கப்பட்டது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவினால் வவுனியா பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்திற்கு அமையவே இவ் அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

காணி கச்சேரிகள் மற்றும் நடமாடும் சேவை மூலம் கிடைக்கப்பெற்ற 25,163 காணி தொடர்பான விண்ணப்பங்களில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களுக்கு இவ் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா தெரிவித்தார்.

இவ் அனுமதிப்பத்திரங்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வவுனியா அபிவிருத்தி குழு தலைவருமான ரிசாட் பதியுர்தீன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,  முத்தலிபாபா பாரூக், வட மாகாண சபை உறுப்பினர்களான எம் தியாகராஜா, எஸ். ஜெயதிலக ஆகியோர் வழங்கிவைத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X