2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஏ9 வீதியை கடந்த முதலை பலி

Menaka Mookandi   / 2014 ஜூலை 01 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏ9 வீதியை கடந்துகொண்டிருந்த முதலையொன்று வாகனத்தில் மோதி இறந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் குளங்களில் நீர் வற்றியுள்ளமையினால் முதலைகள் தற்போது நீர் தேடி நிலப்பரப்பிற்குள் வருகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை (01) ஏ9 வீதியை சுமார் 5 அடி நீளமுள்ள முதலையொன்று கடந்துகொண்டிருந்த சமயம், எதிர்பாராத விதமாக வாகனமொறு அதன் தலை மீது ஏறியமையினால் அவ்விடத்திலேயே இறந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X