R.Tharaniya / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கிருஸ்தவமன்ற ஆயர்பேரவையினரால் இனப்படுகொலைக்குநீதி வேண்டி"செம்மணி உடனிருப்பு வேண்டுதல்" இன்று செம்மணி அணையாதீப சுற்று வட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
வியாழக்கிழமை (30) அன்று காலை முன்னெடுக்கப்பட்ட இந்தப் அடையாளப் போராட்டத்தில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களின் மறை மாவட்ட ஆயர்கள் அருட்சகோதரர்கள் எனபல கத்தோலிக்க பிரமுகர்கள் பங்கெடுத்து முன்னெடுத்திருந்தனர்.
முன்பதாக அணையாதீப தூபிக்குமலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக சிந்துபாத்தி மயானம் சுற்று வட்டம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து கூறிய தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையின் பொதுச் செயலாளர் சுஜிதர் சிவநாயகம்- செம்மணி மனிதபுதைகுழி தொடர்பான தகவல்கள் மீண்டும் பல தமிழ் மற்றும் சில ஆங்கில ஊடகங்களின் வழியாக வெளிக்காணரப்பட்டிருப்பதைக் குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் அதன்ஆழ்ந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
இருப்பினும் இது தொடர்பான செய்திகள் குறித்து பிரதான சிங்கள ஊடகங்களின் கவனம் குறைவாக இருப்பது மிகவும் கவலைக்குரியது. ஒரு நாடாக,இவ் விதமான வலி மிகுந்த உண்மைகளிலிருந்து நாம்பின் வாங்க முடியாது.
இதே நேரம் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில்,1980களின் இறுதியிலிருந்து இலங்கையில் 60,000 முதல்100,000 பேர் வரைகாணாமல் போயுள்ளனர்என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2017 இல் நிறுவப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம், பாதுகாப்பு படையினரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சுமார் 21,000க்கும் அதிகமான முறையீடுகளை பெற்றுள்ளது.
இத்தகைய புள்ளி விவரங்கள்,வலிந்து காணாமல்ஆக்கப்படுதல் குறித்ததுயரம் எமது நாட்டில் ஒவ்வொரு சமூகத்தையும் பாதித்திருக்கிறது. அதே வேளையில் சர்வதேச தர நிலைகளுக்கு ஏற்ப முறையாகபுதைகுழிகளை அகழ்வதில் எங்கள் திதன்களில் உள்ள கடுமையான எல்லைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இதே நேரம் சர்வதேச தொழில்நுட்ப ஆதரவின் அவசியத்தை சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம்(ICJ) வலியுறுத்தியுள்ளது, மேலும் அத்தகைய உதவியை தாமதமின்றி நாடுமாறுஅரசாங்கத்தை கோருகின்றோம்.
அத்துடன் வளங்கள்பற்றாக்குறையால் உண்மையை சமரசம் செய்ய முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். செம்மணி மனிதபுதைகுழி தனித்துவமானவேதனையை வெளிப்படுத்துகிறது.
மற்றைய மனித புதைகுழிகளில் இளையோர் மற்றும் முதியோர் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும், இங்கு பாடசாலைப் பைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவை உயிர்கள் அழிந்ததையும், மேலும் எமது நாட்டைச்சிதைத்த இனஅரசியல் பரிமாணங்களையும் சாட்சியப்படுத்துகின்றன.இவ் அகழ்வுகள் மீதான மௌனம்,சமூகங்களுக்கு இடையிலானஅவ நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதோடு, போரின்காயங்களை நீடிக்கச்செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது.
செம்மணி மனித புதைகுழி விசாரணைமுழுமையாகவும் வெளிப்படையாகவும் நிறைவுக்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், அது தமது காணாமல் போன உறவுகளுக்கான பதில்களை இன்றும் தேடி அலையும் குடும்பங்களுக்கு ஓரளவு நீதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீதி தாமதிக்கப்பட்டாலும் அது மறுக்கப்படமாட்டாது என்ற நம்பிக்கையை எம் மக்களுக்கு தரக்கூடிய ஒளிக்கீற்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் இந்நாட்டின் மக்களாகவும் பாதிக்கப்பட்டவர்களோடும் அவர்களின் என்பதை குடும்பத்தினரோடும் நாங்கள் எங்களை அடையாளப்படுத்துகிறோம் வலியுறுத்துகிறோம்.
நீதி என்பது மனித உரிமை மட்டுமல்ல அது வேதாகமக் கட்டளையாகும்.இதையே இறைவாக்கினர்மீக்கா நமக்கு நினைவூட்டுகிறார், "நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?" எனவே,
எத்தகைய வேதனையான தாயிருந்தாலும்,உண்மையைத் தேடும் முயற்சியில் அரசு,சிவில் சமூகம் மற்றும் மத சமூகங்கள் ஒன்றிணைய வேண்டுமென நாங்கள் அழைக்கிறோம்.
அத்துடன் நேர்மையும் தைரியமும் கொண்டு நீதி நாடப்பட்டால் மட்டுமே குணமடையும் நிலையும் நல்லிணக்கமும் சமூகத்தில் வேரூன்றும் என்றும் வலியுதுத்தியிருந்தமை குதிப்பிடத்தக்கது.
இன்றைய போராட்டத்தில் பேராயர் அதி.வண.நிஷாந்த பெர்னான்டோதலைவர் இலங்கை தேசிய கிறிஸ்தவமன்றம், பேராயர்அதி, வண,துஷாந்த றொட்ரிகோ- இலங்கைத் திரு அவை,கொழும்பு மறைமாவட்டம்,பேராயர். அதி,வண. வே.பத்மதயாளன் தென்னிந்திய திருச்சபை, யாழ்மறை மாவட்டம்,அருட்பணி. கிங்சிலிவீரசிங்க தலைவர் இலங்கை மெதடிஸ்ததிருஅவை, அருட்பணி.விலி ரணசிங்க இலங்கை பெப்டிஸ்ட் திரு அவை, அருட்பணி.சமன் பெரேரா,தலைவர் இலங்கை பிரஸ்பிட்டேரியன் திருஅவை,இணை போதகர்.லக்மால் விஜயரெட்ண,தலைவர் கிறிஸ்தவ சீர்திருத்த திரு அவை,ஆணையாளர் நிஹால்ஹெட்டியாராச்சி, பிராந்தியதளபதி இரட்சணியசேனை, அருள்அறிவர்.கிறிஸ்சோ ஹெண்டி,தலைவர் இலங்கைமக்கள் தேவ அவை, அருள்அறிவர்.ரொமேஷ் புலத்சிங்ஹல,தலைவர் நாற்சதுரசுவிசேஷ திரு அவை.இளம் ஆடவர்கிறிஸ்தவ அமைப்பு(YMCA),இளம் பெண்கள் கிறிஸ்தவ அமைப்பு(YWCA).கிறிஸ்தவ மாணவர் ஒன்றியம் (SCM),இலங்கை வேதாகம சங்கம்,கிறிஸ்தவ இலக்கிய சங்கம்,இலங்கை இறையியல் கல்லூரி,சத்திய வசனம்,கொழும்பு இறையியல் கல்லூரி (CTS).கிறிஸ்துவுக்காக வாலிபர் அமைப்பு (YFC)அருட்பணி. சுஜிதர்சிவநாயகம், பொதுச்செயலாளர் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தைச் சேர்ந்தோர் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago