2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

வவுணதீவில் கைக்குண்டுகள் மீட்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகாலபோட்டமடு பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில், நான்கு கைக்குண்டுகள், நேற்று (10)) மீட்கப்பட்டுள்ளன.

வவுணதீவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, தாண்டியடி விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்தக் கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

பெரியகாலபோட்டமடு பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறம் உள்ள வயற்காணியில் விதைப்பிற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மேற்கொள்ளும் போது கைக்குண்டுகளை கண்ட காணி உரிமையாளரே  பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த 4 கைக்குண்டுகளும் கடந்த யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .