2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

இராஜகிராமத்தில் மோதல்;15 பேருக்கு எதிராக வழக்கு

Niroshini   / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் - நெல்லியடி, இராஜகிராமத்தில், இரு கோஷ்டிகளுக்கிடையில் நேற்று (15) இரவு இடம்பெற்ற மோதலில், 15 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும் அவர்கள் மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நேற்று   இரவு இரு கோஷ்டிகள் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்றிருந்த பொலிஸார், மோதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகத்தின் பேரில், 15 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு, பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

 கொரோனா அபாயம் காரணமாகவே, அவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டதாகவும் இருந்தபோதும், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில்  அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X