2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

கீரிமலை கடலில் நீராடிய இளைஞன் பலி

Niroshini   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்

யாழப்பாணம் - கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த  நிலையில் கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 19) எனும் இளைஞனே, இவ்வாறு காணாமல் போன நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
உறவினரின் அந்தியேட்டி கிரியைக்காக, இன்று (06), கீரிமலைக்குச் சென்ற குறித்த இளைஞன், கிரியைகளை முடித்துக்கொண்டு, கீரிமலை கடலில் நீராடிக்கொண்டு இருந்த வேளை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
 
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும்  கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்து நிலையில், குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில், காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .