2021 ஜூலை 31, சனிக்கிழமை

நீதிமன்றத்திற்கு செல்வதற்கு பயமில்லை-நிஷாந்த முத்துஹெட்டிகம

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்திற்கு  செல்வதற்கு  தனக்கு பயமில்லை என கடந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் நீதியானதாக அமைந்ததாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார். இதனை பிரபல நடிகை கீதா குமாரசிங்ஹ ஏற்றுக்கொண்டிருப்பதுடன்,  தேர்தல் முடிவுகள் நியாயமற்ற முறையில் அமைந்துள்ளது என அவரால் கூற முடியாது எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டார்.

வேரொருவரே  நீதிமன்றத்திற்கு தங்களை இழுத்திருப்பதாகவும், எனினும், நீதிமன்றத்திற்கு  செல்வதற்கு தனக்கு எந்தவித பயமும் இல்லை எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.

தனது கட்சித் தலைவர்களாலேயே தனக்கு எதிரான  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல நடிகை குற்றஞ்சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், பிரபல நடிகை கீதா குமாரசிங்ஹ தான் போட்டியிட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .