2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

யொஹானிக்கு பாராளுமன்றத்தில் பாராட்டும் நிகழ்வு

Editorial   / 2021 நவம்பர் 19 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தலைமுறைப் பாடகி யொஹானி திலோகா டி சில்வாவைப் பாராட்டும் வகையில் நிகழ்வொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதனை ஏற்பாடு செய்துள்ளதாக ஒன்றியத்தின் செயலாளரும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார்.  

யொஹானி திலோகா டி சில்வா பாடிய "மெனிகே மகே ஹிதே" பாடல் தற்பொழுது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகவும் பிரபலமாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .