2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

'பொய்யான பிரசாரத்தை பரப்புகிறது அரசாங்கம்'

Freelancer   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது கட்சி தொடர்பில் பொய்யான பிரசாரத்தை பரப்புவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பல பில்லியன் ரூபாய் செலவு செய்ததாக இணையத்தளத்தில் வெளியான அறிக்கைகள் பொய்யானவை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெட்டி தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார். 

அரசாங்கத்தின் கூட்டாளிகளால் பொய்யான அறிக்கைகள் பரப்பப்படுகின்றன என்று கூறிய அவர், முக்கிய நபர்களின் பேஸ்புக் கணக்குகளில் பகிரப்பட்ட பதிவுகளிலிருந்து இது தெளிவாகிறது என்றார்.

அரசாங்கம் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றத் தவறியதால் அரசாங்கம் திவாலான நிலையில் உள்ளது என்பதற்கு இத்தகைய நடவடிக்கைகள் சான்றாகும் என்றும் சுட்டிக்காட்னார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, உரப் பற்றாக்குறை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் மணவர்களின் கல்வியில் இடையூறு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பொது மக்கள் சுமையில் இருப்பதாக குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .