2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

‘கடனும் இல்லை பயமும் இல்லை’

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டின் பாரிய மக்கள் ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக்​கொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 ரணில் விக்கிரமசிங்க போன்ற திருடர்களை ஜனாதிபதி பாதுகாத்தார். அரசியல்வாதிகள் என்ற ரீதியில்  எமக்கு கடனும் இல்லை, பயமும் இல்லை.ரணில் விக்கிரமசிங்க 50 திருடர்களைப் பாதுகாத்தால், மைத்திரி 50 அல்லது 51 பேரை பாதுகாக்கின்றார். ஊழலுக்கு எதிரான மக்கள் ஆணையைப் பெற்றவர் மைத்திரிபால சிறிசேன.அவர் தான் இரண்டாவது யூதாஸ். அதேப்போல் மூன்றாவது காட்டிக்கொடுப்பை செய்தவர் மஹிந்த என்றும் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .