2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

உள்நாட்டு முகவர் நிறுவன தலைவருக்கு பிணை

J.A. George   / 2021 ஜூன் 16 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் தீவிபத்துக்கு உள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவரான அர்ஜுன ஹெட்டியாரச்சிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கம் மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பில் கப்பலின் கெப்டன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .