2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

ஒமிக்ரோன் திரிபால் பல நாடுகள் கட்டுப்பாடு

Freelancer   / 2021 நவம்பர் 27 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்ஆபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் என அழைக்கப்படும் மாறுபாடு தொற்றியோர் என சந்தேகிக்கப்படுவோர், ஜேர்மனி மற்றும் செக் குடியரசில், இன்றையதினம் (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக, இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, ஈரான், பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் தென் ஆபிரிக்காவுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

ஆரம்பத்தில் பி.1.1.529 என்று பெயரிடப்பட்டு தற்போது ஒமிக்ரோன் என்று அழைக்கப்படும் இந்த மாறுபாட்டின் எண்ணிக்கை தென்ஆப்பிரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது.

புதிய மாறுபாட்டின் தாக்கத்தை புரிந்து கொள்ள சில வாரங்களாகும் என்று ஸ்தாபனம் கூறியதுடன், விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .