2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

‘ரணிலின் மூளை மஹிந்தவின் சரீரமும் இணைய வேண்டும்’

Freelancer   / 2021 ஜூன் 25 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் தேசிய ரீதியாக கலாசார ரீதியாக சமய ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தலைவர் என்ற ரீதியில் தனது அதிகாரத்தில் இருந்துகொண்டு நாட்டுக்காக  சேவைகள் செய்தவர் ரணிலே எனத் தெரிவித்த அபயராம விகாரையின் விகாராதிபதி முருதொட்டுவே ஆனந்த தேரர் கட்சி பேதமின்றி தான் இதனைச் சொல்வதாகவும் ரணிலும் மஹிந்தவும் ஒன்றிணைந்தால் நாட்டுக்கு சிறந்த சேவையாற்ற முடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகக்  காணப்பட்டது என்றார்.

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக நேற்று முன்தினம் (23) பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் அபயராம விகாரைக்குச் சென்று தேரரிடம் ஆசி பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து  தெரிவித்த அவர், மக்களதும் நாட்டினதும் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தமது சொந்தப் பிரச்சினைகளிலேயே முழு அமைச்சரவையும் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்த அவர் பாரிய எதிர்பார்ப்புடன் புதிய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்த மக்கள் இன்று எம்மைக் குறை கூறுகின்றனர் என்றார்.

எனவே சிறந்த தலைவரான ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து மீண்டும் நாட்டுக்கு சிறந்த சேவைகளை எதிர்பார்ப்பதாக் கூறிய அவர் “முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பல குறைப்பாடுகள் காணப்பட்டாலும் அவர் நாட்டுக்காக பல சேவைகளை ஆற்றியுள்ளார். எனினும் கடந்த காலங்களை புறந்தள்ளி எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம்” என்றார்.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .