2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

லிட்ரோ தலைவர் வெளியிட்ட அறிவிப்பு

Freelancer   / 2022 நவம்பர் 27 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வரையறுக்கப்பட்ட அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், டிசெம்பர், முதலாம் திகதி முதல் 1 இலட்சம்  சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக தெரிவித்தது.

அதற்கிணங்க, நாளாந்தம் தலா 40,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்றும் ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் இன்றையதினம் (27) சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் அதிக கேள்வி இருப்பதாலும், முற்பதிவு செய்யப்பட்ட  எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதமும், வரையறுக்கப்பட்ட விநியோகத்துக்கு காரணம் என்று  நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

4,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 30ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அதைத் தரையிறக்கிய பின்னர், விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு டிசெம்பர் மாதத்தில் 34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயுவுக்கான முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனவரி வரை கப்பல்கள் தொடர்ந்து வருகைதரும் என்றும் அவர் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .