2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

பூண்டு மோசடி; வர்த்தகர் மகனுக்கு மறியல்

Freelancer   / 2021 ஒக்டோபர் 23 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக கைதுசெய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மகனை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூண்டு தொகையை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும், பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 55 வயதான கோடீஸ்வர வர்த்தகர், இம்மாதம் 6ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருடைய 25 வயதான மகன், இன்றையதினம் கைது செய்யப்பட்டதைடுத்தே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .