2021 ஜூலை 28, புதன்கிழமை

கல்கிஸை கொலைக்கு தகராறே காரணம்

George   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் நேற்று சனிக்கிழமை(31) இரவு இடம்பெற்ற கொலையானது, இரு குழுவினரிடையே ஏற்பட்ட  தகராறு காரணமாக சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 
கொலை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கூரிய ஆயுதமொன்றினால் குறித்த நபர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கொலையுண்டவர் ஆமி சாந்த என்று அழைக்கப்படும் உபுல் துஷார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .