2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட யாழ்ப்பாணத்து சிறுமிகள்

Freelancer   / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல - அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர  குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த இவர்கள் நேற்று உறவினர்களுடன் குமாரி எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளனர்.

நேற்று மாலை பெய்த கடும் மழையினால் திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நீராடிக்கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.

 மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர். ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.

ஹங்வெல்ல பொலிசார் மற்றும் களுவக்கல்ல இராணுவ முகாமின் அதிகாரிகள், பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடியுள்ளனர்.

இதன்போது, இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் நீர்வீழ்ச்சியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த சிறுமி 16 வயதுடைய எக்மன் தேவதாஸ் இஷாரா என்று நம்பப்படுகின்றது.

மேலும், காணாமல் போயுள்ள இருவரையு தேடும் பணி தொடர்கின்றது.

காணாமல் போனவர்கள்

எக்மன் தேவதாஸ் மிதுஷா வயது 14 
132 மடம் கொன்வன்ட்  வீதி யாழ்ப்பாணம்

வேவனி ஜேசுதாஸ் 29 வயது இலக்கம் 30/3 கெரவலபிட்டிய - வத்தளை 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .