2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

பாசிக்குடா...

A.P.Mathan   / 2012 ஜூலை 31 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனைக்கு அருகாமையில் இருக்கும் அழகிய கற்பரப்புத்தான் பாசிக்குடா. இந்த பிரதேசம் சுற்றுலா பயணிகளின் உல்லாசபுரி என்றால் அது மிகையாகாது. அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு இங்கு சிறப்பானது. பாசிக்குடா கடற்பரப்பில் எவரும் பயமில்லாது குளிக்கலாம். ஏனெனில் இங்கு ஆழமோ ஆபத்தோ கிடையாது. அதுமட்டுமல்லாமல் மிக நீண்ட தூரம் கடலுக்குள் நடந்து செல்லலாம். சுமார் 5 அடி ஆழமான பகுதிவரை தாராளமாக நீந்திச் செல்லலாம்.

இப்படி சுற்றுலா சிறப்பு மிக்க பாசிக்குடா பகுதி இப்பொழுது பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது. நட்சத்திர அந்தஸ்துடைய பல ஹோட்டல்கள் இங்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சுற்றுப்புறமும் நன்கு அபிவிருத்தி கண்டு வருகின்றமை இப்பிரதேசத்தின் சிறப்பாகும். (படங்கள்: குஸான் பத்திராஜ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .