2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

கரப்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 31 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்ரமணியம் பாஸ்கரன்

வட மாகாண கரப்பந்தாட்ட மத்தியஸ்தர்களிற்கான சான்றிதழ் வழங்கு நிகழ்வானது, கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ஐ. போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டிருந்ததுடன், கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம். ஆர். மேகனதாஸ், மாவட்ட செயலக விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் எழுத்து மற்றும் செயன்முறை பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தவர்களை கௌரவித்து, அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வாக இது நடைபெற்றது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X