2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

புனிதர்களின் கால்ப்பந்து சமர்: சமநிலையில் முடிவு

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சிஆர்,எப்சி   மைதானத்தில்  நடைபெற்ற புனித ஜோசப் மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான 25 ஆவது  புனிதர்களின் கால்ப்பந்து சமர் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. 

 இந்த போட்டியின் முடிவை பெனால்டி  மூலம் தீர்மானிப் பதற்கு ஏற்பாட்டாளர்கள் முயன்றபோதும் போதிய வெளிச்சமின்மை காரணமாக நடைபெறவில்லை.

இதன்படி கடந்த முறை சம்பியனான புனித ஜோசப் கல்லூரி தொடர்ந்தும் கௌரவ ஸ்டான்லி அபேசேகர மற்றும் அருட்தந்தை ஜோ விக்ரமசிங்க கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது. 

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக CR மைதானம் ஈரலிப்புடனும் வழுக்கும் தன்மையுடனும் இருந்ததால் குறித்த நேரத்திற்கு போட்டியை ஆரம்பிக்க முடியாமல் போனது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .