2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

நமுனுகுலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்தகலை தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 பெண்களும் 4 ஆண்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று (11) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 7 பேரும் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் இருவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .