2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

போதைப்பொருள் விவகாரம்; மூவர் கைதாகினர்

Princiya Dixci   / 2021 ஜூலை 22 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் உட்பட ஐஸ் போதைப்பொருள்  பாவனயில்  ஈடுபட்ட இருவர் அடங்களாக மூவர், நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாலமுனை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரிடம் இருந்து 4 கிராமும்  250 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் ஒருவரிடமிருந்து ஒரு கிராமும் 430 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒருவரிடமிருந்து 490 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .