2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

ஹட்டனில் வர்த்தக நிலையங்களை பூட்டிய பொலிஸார்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அதனை மீறி ஹட்டன் நகரில் பகுதியளவில் திறக்கப்பட்ட பெரும்பாலான வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு, ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால், ஹட்டன் நகருக்கு வருகைத் தருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியே, வர்த்தக நிலையங்களை மூட  நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், ஹட்டன் நகரில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை எடுத்தமை, அசாதாரணமான விடயம் என்றும் ஹட்டன் நகர வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .